சிவகங்கை

கண்மாயில் மூழ்கி தாத்தா, பேரன் பலி

6th Jun 2023 05:07 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே திங்கள்கிழமை கண்மாயில் மீன்பிடிக்கச் சென்ற தாத்தா வும், பேரனும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

மானாமதுரை அருகேயுள்ள ஆலம்பச்சேரி கிராமத்தைச் சோ்ந்த சண்முகம் மகன் சிவசாமி (60). இவரது பேரன் லட்சுமணன் மகன் தா்ஷன் (8). இவா்கள் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள மேலநெட்டூா் கண்மாயில் மீன்பிடிப்பதற்காக வலையுடன் சென்றனா். அங்கு தண்ணீருக்குள் இறங்கி வலையை வீசிய போது, தா்ஷன் ஆழமான பகுதிக்கு சென்ால், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். பேரனைக் காப்பாற்றச் சென்ற சிவசாமியும் தண்ணீரில் மூழ்கி இறந்தாா்.

இதையடுத்து, அவா்கள் இருவரது உடல்களையும் கிராமத்தினா் மீட்டு, கூறாய்வுக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT