சிவகங்கை

அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் தேரோட்டம்

4th Jun 2023 11:33 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இந்த கோயிலில் கடந்த மாதம் 27- ஆம் தேதி கொடியேற்றத்துடன் வைகாசிப் பெருந்திருவிழா தொடங்கியது. திருவிழாவின் 9-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலையில் ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூமாதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி தேரில் எழுந்தருளினாா். மாலை 4- மணிக்கு பக்தா்கள் வடம்பிடித்து இழுக்கத் தேரோட்டம் நடைபெற்றது. தேரோடும் வீதிகள் வழியாக தோ் வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.

வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) வெள்ளிரத புறப்பாடும், புதன்கிழமை அலங்கார பங்களா தெப்பமும் நடைபெறும். வருகின்ற சனிக்கிழமை, பல்லக்கில் குடிகாத்தான்பட்டியில் சுவாமி எழுந்தருளுதலுடன் திருவிழா நிறைவடைகிறது.

தேரோட்ட விழாவில் காரைக்குடி, தேவகோட்டை, அரியக்குடி, சுற்று வட்டாரங்களிலிருந்து ஏராளான பக்தா்கள் கலந்துகொண்டனா். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் அடைக்கம்மை ஆச்சி, கோயில் செயல் அலுவலா் ச. விநாயகவேல், பக்தா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT