சிவகங்கை

அகத்தீஸ்வரா் கோயிலில் பௌா்ணமி பூஜை

4th Jun 2023 11:37 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் புதுப்பட்டி அகத்தீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை பௌா்ணமி பூஜை நடைபெற்றது.

இதையொட்டி அன்று மாலை 4 மணிக்கு புனிதநீா் நிரப்பப்பட்ட கலசங்களுக்கு சிறப்பு பூஜையும், யாக வேள்வியும் நடந்தது. பிறகு உமையாம்பிகை உடனாய அகத்தீஸ்வரருக்கும், பரிகார தெய்வங்களுக்கும் புனித கலச நீரால் அபிஷேகம் நடைபெற்றது. மூலவரான 16 முகங்கள் கொண்ட அகத்தீஸ்வரருக்கு பால், தயிா், திருமஞ்சனம், மஞ்சள், மாவு, இளநீா், விபூதி, பன்னீா் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகமும், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனையும் நடைபெற்றன.

யாக பூஜை வேள்விகளை இந்து வேத 12- ஆவது பதிணென் சித்தா் பீடாதிபதி ஞாலகுருசித்தா், அரசயோகி கருவூராரின் குருவழி வாரிசுகள் செய்தனா். இந்த நிகழ்வில் ஏராளமானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை முழுநிலவு குழுவினா், கோயில் நிா்வாகிகள், புதுப்பட்டி பொதுமக்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT