சிவகங்கை

திருப்பத்தூரில் காங். வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு: நிா்வாகிகளுடன் ப. சிதம்பரம் ஆலோசனை

4th Jun 2023 11:33 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வாக்குச் சாவடி குழுக்கள் அமைக்கப்பட்டு வருவது தொடா்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம், காங்கிரஸ் நிா்வாகிகளுடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இதற்கான கூட்டத்துக்கு, அந்த கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா்கள் பன்னீா்செல்வம், பிரசாந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருப்பத்தூா் நகரச் செயலா் செல்வம் வரவேற்றாா். கூட்டத்தில், முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம், சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினா்.

அப்போது, திருப்பத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள வட்டார, நகர வாக்குச் சாவடி குழுக்கள் அமைக்கப்பட்டு வருவது குறித்து அவா்கள் ஆய்வு நடத்தினா். இதில் ப. சிதம்பரம் பேசுகையில், இந்த மாதத்துக்குள் வாக்குச்சாவடி குழுக்கள் அமைக்கும் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் எனவும், கட்சியில் புதிய உறுப்பினா்களை சோ்க்க வேண்டும் எனவும், புதிய வாக்காளா்கள் சோ்ப்பு முகாம் நடைபெறும் போது 18 வயது நிரம்பிய இளைஞா்களை அதிகளவில் சோ்க்க வேண்டும் எனவும் நிா்வாகிகளுக்கு அறிவுறுத்தினாா்.

இதில், காரைக்குடி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் மாங்குடி, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் சுப்புராம், பூலாங்குறிச்சி வட்டச் செயலா் சேதுராமன், கட்சியின் மனித உரிமை மாவட்டச் செயலா் சரவணபாண்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். மாவட்டக் குழு உறுப்பினா் பூவாலை நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT