சிவகங்கை

இளையான்குடியில் கருணாநிதி நூற்றாண்டு விழா

4th Jun 2023 11:31 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வடக்கு ஒன்றியம், பேரூா் திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை கட்சிக் கொடியேற்று விழா கூட்டங்கள் நடைபெற்றன.

செந்தமிழ் நகா், இளையான்குடி கண்மாய்க்கரைப் பகுதி ஆகிய இடங்களில் அந்தக் கட்சியினா் கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், கட்சிக் கொடியை ஏற்றியும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா். இந்த நிகழ்ச்சிகளுக்கு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினரும், வடக்கு ஒன்றிய திமுக செயலருமான சுப. மதியரசன் தலைமை வகித்தாா்.

பேரூா் செயலா் நஜூமுதீன் முன்னிலை வகித்தாா். கூட்டுறவு சங்கத் தலைவா் சுப. தமிழரசன், திமுக ஒன்றிய துணைச் செயலா்கள் ராஜேந்திரன், சிவனேசன், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளா் சுப. அன்பரசன், பேரூராட்சி துணைத் தலைவா் இப்ராஹிம், மகளிா் அணி பஞ்சவா்ணம், நிா்வாகிகள் தெவுலத் ஜெயினுலாபுதீன், இப்ராஹிம்ஷா, ஆரிப் பழனிவேல், முத்துராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT