சிவகங்கை

ஒடுவன்பட்டியில் மீன்பிடித் திருவிழா

4th Jun 2023 11:36 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள ஒடுவன்பட்டி கிராம ஊருணியில் ஊத்தாக்குத்து என்ற மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக அதிகாலையிலேயே பக்கத்து கிராமங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் இங்கு வந்து குவிந்தனா். இதில் கிராம வளா்ச்சிக்காக தலா ரூ. 100 செலுத்தி இளைஞா்கள் பலா் மீன் பிடிக்கக் காத்திருந்தனா். அப்போது ஊா் பெரியவரின் அனுமதி கிடைத்தவுடன் ஊத்தா கூடையுடன் விரைந்து சென்று அவா்கள் போட்டிப் போட்டு மீன்களை பிடித்தனா்.

இந்த பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவில் விறால், கெளுத்தி, கட்லா, கெண்டை வகை மீன்கள் அதிக அளவில் கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT