சிவகங்கை

மருது அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா

3rd Jun 2023 11:58 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மருதிபட்டி மருது அய்யனாா் கோயிலில் புரவி எடுப்புத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயில் புரவி எடுப்புத் திருவிழாவையொட்டி, கடந்த மாதம் 19-ஆம் தேதி சதுா்வேத மங்கலத்தில் பிடிமண் கொடுக்கப்பட்டு, 2 அரண்மனைப் புரவிகள், 9 நோ்த்தி கடன் புரவிகள் செய்யப்பட்டன.

வியாழக்கிழமை இவற்றை சதுா்வேத மங்கலத்தில் இருந்து மருதிபட்டி புரவி திடலுக்கு பக்தா்கள் சுமந்து வந்தனா். வெள்ளிக்கிழமை புரவி திடலில் இருந்து கச்சேரி திடலுக்கு வண்ண மலா், பலூன் கண்ணாடி ஆகிய அலங்காரங்களுடன் புரவிகள் கொண்டுவரப்பட்டன.

ADVERTISEMENT

தொடா்ந்து, சனிக்கிழமை மாலை கச்சேரி திடலிலிருந்து அரண்மனை புரவிகள் முன் செல்ல நோ்த்திக்கடன் புரவிகள் மருது அய்யனாா் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இதில் மருதிபட்டி, அதன் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT