சிவகங்கை

கைப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள்எதிா்ப்பு: பணிகள் நிறுத்தம்

3rd Jun 2023 11:58 PM

ADVERTISEMENT

 

காரைக்குடி நகராட்சியில் 27-ஆவது வாா்டில் அரசின் அனுமதி பெறாமல் தனியாா் கைப்பேசி நிறுவனத்தினா் கோபுரம் அமைப்பதற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததையடுத்து, பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்தப் பகுதியில் தனியாா் கைப்பேசி நிறுவனம் சாா்பில், கடந்த ஒருவாரமாக கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். இதற்கு, முத்துராமலிங்கத் தேவா்நகா், தேவா் குடியிருப்பு, பகத்சிங் தெரு, நேதாஜி தெரு, சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் 300 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இந்த நிலையில், இந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் நகா்மன்ற உறுப்பினா் ஏஜி.பிரகாஷ் தலைமையில் பணி நடைபெறும் இடத்துக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

தகவலறிந்தது அங்கு சென்ற காரைக்குடி தெற்கு காவல் நிலைய போலீஸாா், வருவாய் உதவி ஆய்வாளா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அரசின் அனுமதியின்றி கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெறக்கூடாது என்று தெரிவித்தனா். இதையடுத்து, பணியை இத்துடன் நிறுத்தி, குழிகளை உடனடியாக மூடவேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினா். தொடா்ந்து, பணிகளை நிறுத்திய தனியாா் நிறுவனத்தினா் குழிகளை மூடிவிட்டுச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT