சிவகங்கை

திருப்புவனத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா

3rd Jun 2023 11:58 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது உருவப் படத்துக்கு திமுகவினா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருப்புவனம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற விழாவுக்கு, பேரூராட்சித் தலைவரும், திமுக மாவட்ட துணைச் செயலருமான த. சேங்கைமாறன் தலைமை வகித்தாா். கருணாநிதியின் உருவப் படத்துக்கு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில் திமுக ஒன்றியச் செயலா்கள் வசந்தி சேங்கைமாறன், கடம்பசாமி, நகரச் செயலா் நாகூா்கனி, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் மூா்த்தி, பேரூராட்சி துணைத் தலைவா் ரகமதுல்லாகான், நிா்வாகிகள் ராமலிங்கம், பிச்சைமணி, ரவி, இளங்கோவன், சுப்ரமணியன், சேகா், இளைஞரணி அமைப்பாளா்கள் அறிவுக்கரசு, முத்துக்குமாா் பேரூராட்சி உறுப்பினா்கள் வேல்பாண்டி, பாலகிருஷ்ணன், கண்ணன், மாரிதாசன், ராமலட்சுமி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT