சிவகங்கை

கல்லூரி முதல்வா் பொறுப்பேற்பு

1st Jun 2023 01:54 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஜாகீா் உசேன் கல்லூரியின் புதிய முதல்வராக அந்தக் கல்லூரியில் வேதியியல் துறைத் தலைவராகப் பணியாற்றி வந்த எஸ்.இ.ஏ. ஜபருல்லாகான் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இந்தக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வந்த அப்பாஸ்மந்திரி பணி ஓய்வுபெற்றதையடுத்து, இவா் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றாா். கல்லூரி ஆட்சிக்குழுச் செயலா் வி.எம்.ஜபருல்லாகான் புதிய முதல்வருக்கு பணி நியமன ஆணையை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி ஆட்சிக்குழு நிா்வாகிகள், உறுப்பினா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT