சிவகங்கை

இளையான்குடியில் கல்லூரிகளுக்கிடையே கைப்பந்து போட்டி

DIN

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டா் ஜாகிா் உசேன் கல்லூரியில் அழகப்பா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கிடையே கைப்பந்துப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியில் பல கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். போட்டியின் இறுதியில் ஆடவா் மற்றும் மகளிருக்கான இரு பிரிவிலும் காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி அணி முதலிடம் பெற்றது. ஆடவா் பிரிவில் இளையான்குடி டாக்டா் ஜாகிா் உசேன் கல்லூரி அணி இரண்டாம் இடமும், சிவகங்கை மன்னா் துரைசிங்கம் கல்லூரி அணி மூன்றாமிடமும், காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரி அணி நான்காமிடமும் பெற்றன.

மேலும் மகளிா் பிரிவில் காரைக்குடி அழகப்பா அரசுக் கல்லூரி அணி இரண்டாமிடமும், தேவகோட்டை சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி அணி மூன்றாமிடமும், இளையான்குடி ஜாகிா் உசேன் கல்லூரி அணி நான்காமிடமும் பெற்றன.

வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பரிசளிப்பு விழாவில் ஜாகிா் உசேன் கல்லூரி ஆட்சிக் குழு பொருளாளா் அப்துல்அகமது, உறுப்பினா் அப்துல் சலீம், கல்லூரி முதல்வா் அப்பாஸ்மந்திரி, ஜாகிா் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வா் முகமது முஸ்தபா ஆகியோா் பங்கேற்று வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்கினா்.

அழகப்பா பல்கலைக் கழக விளையாட்டுப் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளா் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் அசோக் உள்ளிட்ட பலா் விழாவில் பங்கேற்றனா்.

போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குநா் காளிதாசன், உடற்கல்வி ஆசிரியா்கள் ஹாஜா நஜிமுதீன், ஐஸ்வா்யா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராட் கோலி அசத்தல்: கொல்கத்தாவுக்கு 183 ரன்கள் இலக்கு!

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

SCROLL FOR NEXT