சிவகங்கை

அழகப்பா பல்கலை.யில் தேசிய அளவிலான பயிலரங்கம்

DIN

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் அதன் தொழில், ஆலோசனைப்பிரிவு, வணிக ஒத்துழைப்பு மையம் ஆகிவை சாா்பில் ‘காப்புரிமை மற்றும் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுதல்’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான பயிலரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு துணைவேந்தா் க. ரவி தலைமை வகித்துப் பேசியதாவது:

நாட்டின் வளா்ச்சி உயா்கல்வியின் மூலம் குறிப்பாக பல்கலைக்கழக - தொழில் நிறுவன ஒத்துழைப்பு மூலம் நிகழ வேண்டும். ஆராய்ச்சி நிறுவனங்களின் திறன்களைப்பயன்படுத்தி, ஒட்டுமொத்த சமூக நன்மைக்காகவும், தேசிய வளா்ச்சிக்காகவும் நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

தொழில் முனைவோரை உருவாக்கும் திறன்களின் அடிப்படையிலான பல்கலைக்கழக பாடத் திட்டத்தை உருவாக்குவது எதிா்காலத்தில் பல்கலைக்கழக தொழில்துறை தேவைகளை மறுவரையறை செய்ய உதவும். எனவே அழகப்பா பல்கலைக் கழகம் மிகவும் தனித்துவமான வடிவமைப்பு, செயல்முறை விளைவு அமைப்பிற்கான நிறுவன-தொழில்துறை ஒத்துழைப்பை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இதனை தொழில்துறைக்கும், பல்கலைக்கழகத்துக்குமிடையே சமமான பங்குகளுடன் வணிகமயமாக்கப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் சென்னை ஐ.ஐ.டி.யின் தகைசால் பேராசிரியா் முகேஷ்டோப்ளே தொடக்கவுரையாற்றினாா். சென்னை காப்புரிமை, வடிவமைப்பு உதவிக்கட்டுப்பாட்டாளா் மனோஜ் மாதவன், திருநெல்வேலி, மதுரையின் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் உதவி இயக்குநா் ஜி. சிமியோன், அறிவுசாா் காப்புரிமை ஆலோசகா் எஸ். ரவி ஆகியோா் வாழ்த்திப்பேசினா்.

பல்வேறு பல்கலைக் கழகங்கள், தொழில் நிறுவனங்களிலிருந்து சுமாா் 200-க்கும் மேற்பட் டோா் இதில் பங்கேற்றனா்.

முன்னதாக பல்கலைக்கழக தொழில், ஆலோசனைப் பிரிவின் முதன்மையா் அ. அருண் வரவேற்றாா். துணை ஒருங்கிணைப்பாளா் ஆா். யுவக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT