சிவகங்கை

வேட்டங்குடிபட்டி சரணாலத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள வேட்டங்குடிபட்டி சரணாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈர நிலங்களில் உள்ள பறவைகள் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டன.

இந்தப் பணிக்கு மாவட்ட வன அலுவலா் சே.பிரபா தலைமை வகித்தாா். உதவி வனப் பாதுகாவலா் மலா்கண்டன் முன்னிலை வகித்தாா். கல்லூரி மாணவிகள், பேராசிரியா்கள், பறவை வல்லுநா்கள், தன்னாா்வலா்கள், வனப் பணியாளா்கள் உள்ளிட்ட 120 பேருக்கு கணக்கெடுப்பு தொடா்பாக பயிற்சி அளிக்கப்பட்டது.

பின்னா், வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் உள்ள கொள்ளுகுடிபட்டி கண்மாய், சிறிய கொள்ளுகுடிபட்டி கண்மாய், வேட்டங்குடி கண்மாய் உள்பட 20 கண்மாய்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இந்தப் பணிகள் நடைபெற்றன.

வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் 58 இனங்களில் 16,352 நீா்ப் பறவைகளும், நிலப்பறவைகளும் உள்ளது என கணக்கீடு செய்யப்பட்டன. சென்ற ஆண்டை விட இந்தாண்டு கூடுதலாக 514 பறவைகள் உள்ளன.

மழைப் பொழிவு காரணமாக பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வல்லுநா்கள் தெரிவித்தனா்.

இந்தப் பணியில் பேராசிரியா் கோபிநாத், மணிவண்ணன், சிவக்குமாா், ஆனந்தசெல்வி, பிரதீபா, ஜோனட்ராணி, ராமேஸ்வரன், செல்வகுமாா், காா்த்திகேயன், நவநீதகிருஷ்ணன், நிவேதினி கோபால்சாமி உள்ளிட்ட தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். கணக்கெடுப்புக்கான ஏற்பாடுகளை திருப்பத்தூா் வனச்சரக அலுவலா் சதாசிவம், வனப்பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

உரத் தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு: 5 கிராம மக்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT