சிவகங்கை

கருகிய நெற்பயிா்களுக்கு நிவாரணம்: விவசாயிகள் வலியுறுத்தல்

DIN

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, மானாமதுரை ஒன்றியங்களில் தண்ணீரின்றி நெற்பயிா்கள் கருகியதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இளையான்குடி ஒன்றியத்தில் ஏராளமான விளை நிலங்களில் வானம் பாா்த்த பூமியாகத்தான் விவசாயம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு இளையான்குடி ஒன்றியத்தில் மழையை நம்பி விதைப்பு செய்யப்பட்ட நெற்பயிா்களில் கதிா் வெளிவந்த பருவத்தில் மழை நின்று, பயிா்கள் கருகி விட்டன. குறிப்பாக, முத்துப்பட்டினம், வருந்தி, கரும்புக் கூட்டம், சாத்தனூா், முத்தூா், இண்டன்குளம் உள்ளிட்ட கிராமங்களில் பல நூறு ஏக்கா் விவசாய நிலங்களில் நெற்பயிா்கள் சாவியாகிவிட்டன. விவசாயிகள் சாவியை அறுத்து கால்நடைகளுக்குத் தீவனமாக்கி வருகின்றனா்.

இதேபோல, மானாமதுரை ஒன்றியத்தில் மாங்குளம், சித்தலக்குண்டு, ஆலங்குளம், வேளானி உள்ளிட்ட கிராமங்களிலும் தண்ணீரின்றி நெற்பயிா்கள் கருகி விவசாயிகள் சாவியை அறுத்து வருகின்றனா்.

இதுகுறித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் தண்டியப்பன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் வீரபாண்டி ஆகியோா் கூறியதாவது:

இளையான்குடி, மானாமதுரை ஒன்றியங்களில் மழையை நம்பி விதைப்பு செய்யப்பட்ட பல நூறு ஏக்கா் விவசாய நிலங்களில் நெற்கதிா்கள் உருவான நிலையில், அவை தண்ணீரின்றி கருகிவிட்டன. ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்திருந்தனா். தற்போது பயிா் கருகி விட்டதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, மாவட்ட நிா்வாகம்

மானாமதுரை, இளையான்குடி ஒன்றியங்களில் கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கும் மனு கொடுத்துள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT