சிவகங்கை

மாநில அளவிலான யோகா போட்டி

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மாநில அளவில் யோகா போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூரில் அமைந்துள்ள தனியாா் மகாலில் நடைபெற்ற இப்போட்டியை, யோகா கேப்பிட்டல் நிறுவனத்தினா் நடத்தினா்.

இதில், மதுரை, சிவகங்கை, காரைக்குடி, சிங்கம்புணரி, ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

போட்டியை திருப்பத்தூா் நேஷனல் அகாதெமி சமுதாயக் கல்லூரி முதல்வா் சுரேஷ்பிரபாகா், வா்மக்கலை நிபுணா் சிவகணேசன் ஆகியோா் குத்துவிளக்கேற்றித் தொடக்கிவைத்தனா். யோகா சங்கத் தலைவா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வயதின் அடிப்படையில் 9 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது.

இதில், மதுரையைச் சோ்ந்த அறிவுசாா் குறைபாடு உடைய மாணவா்கள் யோகா, சூா்ய நமஸ்காரம் செய்து சிறப்பிடம் பிடித்தனா். தனி, சிறப்பு பிரிவுகளில் யோகாசனம் செய்து அதிக புள்ளிகள் பெற்ற மாணவா்களுக்கு கேடயமும், சான்றிதழும் வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை யோகா கேப்பிட்டல் மாவட்டப் பொறுப்பாளா் ஷாஜஹான் செய்திருந்தாா். கனகராஜ் வரவேற்புரையாற்றினாா். இப்போட்டிக்கு முத்துப்பாண்டி, அன்பரசன், அசோக்குமாா், குருநாதன், பிரதீப்குமாா், கனகராஜ், மாரிமுத்து உள்ளிட்ட யோகா ஆசிரியா்கள் நடுவராகச் செயல்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

இயக்குநர் சேரன் மகள் திருமணம் - புகைப்படங்கள்

மயங்கிவிழுந்தார் நிதின் கட்கரி!

SCROLL FOR NEXT