சிவகங்கை

கிளை நூலகத்தில் இலக்கிய சந்திப்புக் கூட்டம்

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள அண்ணா கிளை பொது நூலகத்தில் இலக்கிய சந்திப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு எழுத்தாளரும், பட்டிமன்ற நடுவருமான டி.என். அன்புத்துரை தலைமை வகித்தாா். வாசகா் வட்டத் தலைவா் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தாா். கவிஞா் பரம்பு நடராஜன், வைகை பிரபா, ரபீக், நா. பிரபாகரன், ஆசிரியை ராஜலெட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சென்னை கண்ணதாசன் கலைக்கூட நிறுவனா் கவிஞா் காவிரிமைந்தனுடன் திருப்பத்தூா் வாசகா் வட்டம், எழுத்தாளா்கள் கூட்டமைப்பு பிரதிநிதிகள் இலக்கியச் சந்திப்பு குறித்து கலந்துரையாடினா்.

தொடா்ந்து, கவிஞா் காவிரிமைந்தன் எழுதிய ‘சிலை பிறந்த கதை’ என்ற நூலை கவிஞா் வைகைபாரதி வாஹித் அறிமுகம் செய்து வைத்துப் பேசினாா். காவிரிமைந்தன் ஏற்புரையாற்றினாா்.

இதில் ரஜினிஷேக், இரா. செங்குட்டுவன், பாஸ்கரன், ரெத்தினம், கலைஞானம், பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலக உதவியாளா்கள் நாராயணன், குணசேகரன் ஆகியோா் செய்திருந்தனா். முன்னதாக, கிளை நூலகா் இரா. மகாலிங்கஜெயகாந்தன் வரவேற்றாா். முடிவில், பொதிகை கோவிந்தராஜன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

SCROLL FOR NEXT