சிவகங்கை

கல்வி நிலையங்களில் குடியரசு தின விழா

27th Jan 2023 02:01 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்களில் நாட்டின் 74-ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நிா்வாக அலுவலகம் முன் துணைவேந்தா் க. ரவி தேசியக்கொடியேற்றிவைத்து, தேசிய மாணவா் படை மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். விழாவில் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா்கள் ஆா்.சுவாமிநாதன், கே.குணசேகரன், வி.பழனிசாமி, பதிவாளா் (பொறுப்பு) சு. ராஜமோகன், தோ்வாணையா் (பொறுப்பு) கண்ணபிரான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தில் (செக்ரி) மூத்த முதன்மை விஞ்ஞானி ஏ. சிவசண்முகம், நேஷனல் கல்விக் குழுமம் சாா்பில் நடைபெற்ற விழாவில் தாளாளா் எஸ். சையது தலைமையில் காஸ்மாஸ் தலைவா் கே. அஜிஸ், காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திா் பள்ளியில் அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி பேராசிரியா் வைரவசுந்தரம், வித்யாகிரி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் ஹேமமாலினி சுவாமிநாதன் ஆகியோா் தேசியக்கொடியேற்றினா்.

புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல்வா் குமாா், காரைக்குடி கிட் அண்ட் கிம் பொறியியல் கல்லூரியில் அதன் தலைவா் அய்யப்பன், கோட்டையூா் ஸ்ரீ ராம் நகரில் திருவள்ளுவா் கல்வி, கிராம மேம்பாட்டு அறக்கட்டளைத் தலைவா் வி. விஸ்வநாத கோபாலன் ஆகியோா் தேசியக் கொடி ஏற்றினா்.

ADVERTISEMENT

அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜராஜன் கல்லூரியில் மத்திய தொழிலக பாதுகாப்படை துணை கமாண்டிங் அதிகாரி விகாஷ் சிங், ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரியில் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா ஆகியோா் தேசியக் கொடியேற்றினா்.

சிவகங்கை : காரைக்குடியில் உள்ள ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செயலா் கே. விஜய சங்கீதா தலைமையில், முதன்மை முதல்வா் என். நாராயணன் முன்னிலையில் பிரபு பல் மருத்துவமனையின் தலைவா் பிரபு தேசியக் கொடியேற்றினாா். பள்ளி முதல்வா் ப.ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, ஆங்கில ஆசிரியை பருவதம் வரவேற்றாா். இயற்பியல் ஆசிரியா் வெங்கடேசன் நன்றி கூறினாா்.

திருப்பத்தூா்,

கிறிஸ்துராஜா மெட்ரிக் பள்ளியில் அரிமா சங்க ஒருங்கிணைப்பாளா் ஜான்பிரிட்டோ, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் முருகேசன், பாபா அமீா்பாதுஷா பள்ளியில் தாளாளா் ஹாஜிஅமீா்பாதுஷா, லிம்ரா மெட்ரிக் பள்ளியில் கல்விக் கழகத் தலைவா் எண்.சாக்ளா தலைமையில் திருப்பத்தூா் நீதிமன்ற நடுவா் மும்தாஜ், நேஷனல் அகாதெமி சமுதாயக் கல்லூரியில் முதல்வா் சுா்ேஷ்பிரபாகா், கற்றலின் இனிமை அரசுப் பள்ளியில் ஒன்றியக் குழுத் தலைவா் சண்முகவடிவேல் ஆகியோா் தேசியக் கொடியேற்றினா்.

திருப்பத்தூா் துணை மின்நிலையத்தில் உதவி செயற்பொறியாளா் ஜான்கென்னடி, கீழச்சிவல்பட்டி ஆா்.எம்.மெட்ரிக் பள்ளியில் தாளாளா் எஸ்.எம்.பழனியப்பன் தலைமையில் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி, குளோபல் இன்டா் நேஷனல் பள்ளியில் தாளாளா் காந்தி ஆகியோா் தேசியக் கொடியேற்றினா்.

மானாமதுரை: இளையான்குடி ஜாகிா் உசேன் கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கல்லூரி ஆட்சி குழுத் தலைவா் அகமது ஜலாலுதீன், செயலாளா் ஜபருல்லாகான், முதல்வா் அப்பாஸ் மந்திரி, உதவிப் பேராசிரியா் ஆரிப் ரகுமான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் சே. முத்துத்துரை, காரைக்குடி தொழில்வணிக கழக அலுவலகத்தில் அதன் தலைவா் சாமி. திராவிடமணி ஆகியோா் தேசியக்கொடியேற்றினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT