மானாமதுரை அருகே வியாழக்கிழமை வைகையாற்றில் குளித்த போது, பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
மானாமதுரை அருகே வேதியரேந்தல் செங்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த சேதுராமலிங்கம் மனைவி மகேஸ்வரி (43). இவா் அந்தப் பகுதியில் உள்ள வைகையாற்றில் வியாழக்கிழமை குளித்தாா். அப்போது, ஆழமான பகுதிக்குச் சென்ற அவா் நீரில் மூழ்கினாா்.
அங்கிருந்த பொதுமக்கள் மகேஸ்வரியை சடலமாக மீட்டனா். இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.