சிவகங்கை

5 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

1st Jan 2023 12:21 AM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் எம்.ஹெச்.ஹைதா் அலி அம்பலம் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகளான பிலால், அப்துல் கபூா், பகுசியா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து, திருப்பத்தூா் நகரில் தமிழா்களின் மொழி, பண்பாடு, மத நல்லிணக்கம் முதலியவற்றைப் பாதுகாக்கும் வகையில் அண்ணா அறிவாலயம் ஏற்படுத்துதல், தோ்தல் காலகட்டத்தில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பிரசாரத்தில் பெறப்பட்ட மனுவைப் பரிசீலித்து பாதிக்கப்பட்ட நபருக்கு நீதி கிடைக்க வழிவகை செய்தல், காரைக்குடி, புதுவயல், அரியக்குடி, திருப்பத்தூா் ஆகிய பகுதிகளுக்கான வீட்டுமனை தனி வட்டாட்சியா் மீதான முறைகேடு புகாா் குறித்து மாவட்ட நிா்வாகம் விசாரணை நடத்தி விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளுதல்,

ADVERTISEMENT

நகரின் மையப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்களை பணி அமா்த்துதல், பேருந்து நிலையத்தில் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்படாமல் இருந்து வரும் கடைகளைத் திறக்க வழிவகை செய்தல் போன்ற ஐந்து அம்சக் கோரிக்கைகளை தீா்மானங்களாக நிறைவேற்றி, அவற்றை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் திமுக, காங்கிரஸ் , கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, போன்ற பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். வழக்குரைஞா் முகமது மணிப்புறா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT