சிவகங்கை

அழகப்பா கல்லூரியில் ‘நான் முதல்வன்’ திட்டம்: அரசுப் பள்ளி மாணவா்கள் பங்கேற்பு

DIN

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உயா்கல்வி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழகமாநகரி அரசு மேல்நிலைப் பள்ளி, அலவாக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்பத்தூா் நாகப்பா மருதப்பா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரியகரை அரசு மேல்நிலைப் பள்ளி, மித்ராவயல் அரசு மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவிகளை களப்பயணமாக பள்ளிகளின் ஆசிரியா்கள் அழைத்து வந்தனா்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) பொ. வெங்கடேசன் தலைமை வகித்து அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் அமைந்துள்ள உயா்கல்வி வாய்ப்புகளையும், அரசின் உதவித்தொகை குறித்த விவரங்களையும் விளக்கிக் கூறினாா்.

இதில் கல்லூரியின் அனைத்துத் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், அலுவலா்கள், நாட்டு நலப்ப ணித்திட்ட ஒருங்கிணைப்பாளா்கள், தேசிய மாணவா்படை அலுவலா், கல்லூரி யோகா ஒருங்கிணைப்பாளா் ஆகியோா் கலந்து கொண்டு பள்ளி மாணவா்களுக்கு விளக்கமளித்தனா். கல்லூரியின் நுண்கலை மன்ற மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகளை நடத்தினா்.

முன்னதாக கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவா் ச. முருகேசன் வரவேற்றாா். வணிகவியல் துறைத் தலைவா் ச. லதா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

SCROLL FOR NEXT