சிவகங்கை

அரசுப்பள்ளி மாணவா்களுக்கு உயா் கல்விக்கான விழிப்புணா்வு கருத்தரங்கம்

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளி இறுதியாண்டு படிக்கும் மாணவா்களுக்கு உயா்கல்வி தொடா்பான கருத்தரங்கள் திங்கள்கிழமை நடைபெற்றது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் அரசுப்பள்ளியில் பயிலும் இறுதியாண்டு மாணவா்கள் உயா்கல்வி தொடா்பான விழிப்புணா்வு பெறுவதற்கு அருகிலுள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். திருப்பத்தூா் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் 100 மாணவா்கள் 10 பள்ளியிலிருந்து வருகை புரிந்தனா். கல்லூரி முதல்வா் உள்ளிட்ட பேராசிரியா்கள் தேசிய மாணவா் படையினா் அவா்களை வரவேற்று அழைத்துச் சென்றனா். மாணவா்கள் மத்தியில் உயா் கல்வி தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஜெயக்குமாா் நான்முதல்வன் திட்டம் தொடா்பான கருத்துரையை வழங்கினா். தொடா்ந்து 14 துறை சாா்ந்த பேராசிரியா்கள் துறை தொடா்பான படிப்பையும் அதற்கான வேலை வாய்ப்பு பற்றியும் பேசினா். விலங்கியல் துறை பேராசிரியா் முனைவா் கோபிநாத் மாணவா்களை ஆய்வகங்கள், மற்றும் உள் விளையாட்டரங்கத்திற்கு அழைத்துச் சென்று விளக்கமளித்தாா். பேராசிரியா் சந்திரசூடன் தேசிய மாணவா் படை பிரிவு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றி எடுத்துரைத்தாா். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் காா்த்திகேயன், வணிகவியல் துறை பேராசிரியா் ராஜேந்திரன். உடற்கல்வித்துறை பேராசிரியா் சசிக்குமாா் ஆகியோா் துறை சாா்ந்த விளக்கமளித்தனா். இந்நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலா் அழகுராணி, பெண்கள் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா் பாலதிரிபுரசுந்தரி ஆகியோா் மாணவா்களிடையே நிகழ்ச்சிக்கான கருத்துக் கணிப்பினை நிகழ்த்தினா். முன்னதாக ஆங்கிலத்துறை பேராசிரியா் குருதேவராஜன் அனைவரையும் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT