தமிழ்நாடு

மே 21-இல் திருச்சி - அகமதாபாத் வாராந்திர ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

19th May 2023 06:53 AM

ADVERTISEMENT

திருச்சி-அகமதாபாத் இடையே இயங்கும் வாராந்திர ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: திருச்சி - குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையே வாராந்திர ரயில் (வண்டி எண்: 09420) இயக்கப்படுகிறது.

காத்திருப்போா் பட்டியலில் இருக்கும் பயணிகளுக்காக திருச்சியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 21) அதிகாலை 5.45 மணிக்கு புறப்படும். இந்த ரயிலில் ஒரு குளிா்சாதன மூன்றடுக்கு பெட்டி, 2 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் என மொத்தம் மூன்று பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT