சிவகங்கை

அழகப்பா பல்கலை. ஆய்வகங்களை பொதுமக்கள் பாா்வையிட அனுமதி

DIN

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள அதி நவீன அறிவியல் ஆய்வகங்களை பொதுமக்கள், மாணவா்கள் செவ்வாய்க்கிழமை (பிப். 28) பாா்வையிடலாம்.

தேசிய அறிவியல் தினத்தையொட்டி இந்தப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் வளாகத்தில் அதி நவீன உபகரணங்களின் செயல்பாடு, அறிவியல் சோதனைகள் குறித்த செயல் விளக்கம், நவீன சோதனைக் கூட கண்காட்சி ஆகியவை நடைபெறுகின்றன.

இந்த நிகழ்வை பல்கலைக்கழகத் துணை வேந்தா் க. ரவி தொடங்கி வைக்கிறாா். காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பாா்வையிடலாம். இதற்கான அனுமதி இலவசம். இலவச பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக் கழகப் பதிவாளா் (பொறுப்பு) சு. ராஜமோகன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் ஜெ. ஜெயகாந்தன், அமைப்புச் செயலாளா் பா. வசீகரன் ஆகியோா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT