கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம் நாளை(மே 19) நடைபெற உள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம் கோவையில் நாளை(வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த செயற்குழு கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தவுடு, சிடி ரவி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
பாஜக மேலிட இணைய பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்வது பற்றி ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க | கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா: மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு