இந்தியா

நான் ஏன் கவலைப்பட வேண்டும்? டி.கே. சிவக்குமார் கேள்வி

18th May 2023 06:02 PM

ADVERTISEMENT


புது தில்லி: கர்நாடக துணை முதல்வராக டி.கே. சிவக்குமார் பதவியேற்பார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்த நிலையில், அதற்காக நான் ஏன் கவலைப்பட வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்று பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கிறது. கடந்த சில நாள்களாக முதல்வர் பதவிக்கான போட்டி நிலவி வந்த நிலையில், கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவக்குமாரும் சனிக்கிழமை மதியம் பதவியேற்பார்கள் என்று காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது.

முதல்வர் போட்டியில் இருந்த டி.கே. சிவக்குமார், கட்சி மற்றும் மாநில நலனுக்காக துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், புது தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த டி.கே. சிவக்குமார், கர்நாடக மாநில மக்கள் எங்களுக்கு இவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கும் போது, நாங்கள் நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நாங்கள் அளித்து உறுதிமெழிகளை தவறாமல் நிறைவேற்ற வேண்டும். அதுதான் எங்களது முழு நோக்கம், கொள்கை. அதைவிட்டுவிட்டு நான் ஏன் கவலைப்பட வேண்டும். இன்னும் செல்வதற்கு வெகு தொலைவு உள்ளது என்று பதிலளித்துள்ளார்.

ADVERTISEMENT

நேற்று பேசிய சிவக்குமார், கட்சியில் அனைத்தும் சிறப்பாகவே செல்கிறது. அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம் என்று கூறியிருந்தார்.
 

Tags : Karnataka
ADVERTISEMENT
ADVERTISEMENT