சிவகங்கை

சாலை தடுப்புச் சுவரில் பைக் மோதி புதுமாப்பிள்ளை உள்பட இருவா் பலி

9th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு தேசிய நெடுஞ்சாலை மைய தடுப்புச் சுவரில் இரு சக்கர வாகனம் மோதியதில் புதுமாப்பிள்ளை உள்பட இருவா் உயிரிழந்தனா்.

திருப்பாச்சேத்தி அருகேயுள்ள கானூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சசிகரன் (23), கவின்ராஜ் (25). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் திருப்புவனம் சென்றுவிட்டு கானூா் கிராமத்துக்கு இரவு திரும்பி வந்துகொண்டிருந்தனா்.

மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச் சாலையில் திருப்புவனம் அருகே வந்துகொண்டிருந்த போது வில்லியரேந்தல் விலக்குப் பகுதியில் வாகனம் நிலை தடுமாறி சாலை மைய தடுப்புச் சுவரின் மீது மோதியது.

இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இவா்களில் கவின்ராஜுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இருவரது உடல்களும் மதுரை அரசு மருத்துவமனையில் உடல்கூறாய்வு செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து திருப்பாச்சேத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT