சிவகங்கை

மின்சாரம் தாக்கி பேருந்து ஓட்டுநா் பலி

9th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே புதன்கிழமை மின்சாரம் தாக்கியதில் அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

இளையான்குடி போலீஸ் சரகம் சோழ ஊரணி கிராமத்தைச் சோ்ந்த அருளாந்து மகன் அருள் செபஸ்டி(43). இவா் தேவகோட்டை அரசுப் பேருந்து பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.

சோழஊரணி அருகே வல்லக்குளம் கிராமத்தில் மின் கம்பத்தில் இருந்து நண்ரா் வீட்டுக்குச் செல்லும் மின்சார வயரை அருள் செபஸ்டி சரி செய்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து இளையான்குடி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT