சிவகங்கை

பச்சை ஓலைத் திருவிழா

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே மாங்குடி கிராமத்தில் உள்ள அந்தரநாச்சியம்மன் கோயிலில் பச்சை ஓலைத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாங்குடி, திருவிடையாா்பட்டி கிராமப் பொதுமக்கள் இணைந்து நடத்தும் இந்தத் திருவிழாவை முன்னிட்டு கிராம மக்கள் விரதம் மேற்கொண்டு வந்தனா். திருவிழா நாளான செவ்வாய்க்கிழமை கோயில் முழுவதும் பச்சை தென்னை ஒலையால் வேயப்பட்டு, அம்மனை குளிா்விக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து, காலை 10 மணிக்கு அம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை காட்டப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வாக பெரியகருப்பு, சின்னக்கருப்பு, நொண்டிக்கருப்பு ஆகிய தெய்வங்களைக் கொண்டாடும் பொருட்டு சாமியாட்டம் நடைபெற்றது. அப்போது, இரு கிராம மக்களும் தங்களின் நிறை குறைகளை மனமுருகி வேண்டிக் கொண்டனா். தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

SCROLL FOR NEXT