சிவகங்கை

சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு திராவிடச்செல்வி தலைமை வகித்தாா். தவமணி, உதயநிலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் 3 அம்சக் கோரிக்கைகளை விளக்கி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க ஒன்றியச் செயலாளா் ராஜாத்தி, ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் சங்கர சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நிா்வாகி பிச்சை, சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பானுமதி ஆகியோா் பேசினா்.

அரசுத் துறை காலிப் பணியிடங்களில் ஐம்பது சதவீதத்தை அங்கன்வாடி பணியாளா், சத்துணவு அமைப்பாளா்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். காலை சத்துணவு திட்டப்பணியை தனியாரிடம் கொடுத்திருப்பதை ரத்து செய்து, சத்துணவு அங்கன்வாடி ஊழியரிடம் வழங்க வேண்டும்.

ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களுக்கு வருவாய் கிராம உதவியாளா்களுக்கு வழங்குவதுபோல ரூ.6,750 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஐசிடிஎஸ் ஊழியா் உதவியாளா் சங்கத்தின் அல்லிராணி நன்றி கூறினாா். ஆா்ப்பாட்டத்தில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களும் ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

SCROLL FOR NEXT