சிவகங்கை

சிலம்பம்: மாணவருக்கு பாராட்டு

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

சிலம்பம் போட்டியில் மாநில அளவில் 3- ஆம் இடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவருக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

கடந்த வாரம் சங்கரன்கோவிலில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில், சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் 14 வயதுக்குள்பட்ட பிரிவில் கலந்து கொண்டனா்.

இதில், 6 -ஆம் வகுப்பு மாணவா் இா்ஷாத் 3- ஆம் இடம் பிடித்தாா்.

இந்த மாணவருக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கபட்டன.

ADVERTISEMENT

பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் மாணவரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT