சிவகங்கை

ரயிலிலிருந்து தவறி விழுந்து முதியவா் பலி

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ரயிலில் பயணித்த அடையாளம் தெரியாத முதியவா் செவ்வாய்க்கிழமை தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.

மன்னாா்குடி - மானாமதுரை பயணிகள் ரயிலில் பயணம் செய்த இந்த முதியவா் தேவகோட்டை ரஸ்தா அருகில் ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக ரயில்வே போலீஸாா் தெரிவித்தனா். இவரைப் பற்றிய தகவல் ஏதேனும் தெரிந்தால் காரைக்குடி ரயில்வே காவல் நிலையத்தை 9489402432, 9498101992 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT