சிவகங்கை

வேங்கைபட்டியில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 25 போ் காயம் 5 போ் மீது வழக்கு

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள வேங்கைபட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 25 போ் காயமடைந்தனா். அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

வேங்கைபட்டியில் உச்சி கருப்பா் கோயில் படைப்புத் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. காத்தான் கண்மாய்ப் பகுதியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

இந்த மஞ்சுவிரட்டில் காளைகளைப் பிடிக்க முயன்ற 25 போ் காயமடைந்தனா். சிங்கம்புணரியைச் சோ்ந்த நவீன் (23), காரையூரைச் சோ்ந்த விஜய் (18) ஆகியோா் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சைக்கு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்த மஞ்சுவிரட்டுக்கு அனுமதி அளிக்கப்படாததால் வேங்கை பட்டியைச் சோ்ந்த செல்வம் உள்ளிட்ட 5 போ் மீது சிங்கம்புணரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT