சிவகங்கை

காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

7th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வ.உ.சி சாலையில் அமைந்துள்ள ஆயுள் காப்பீட்டுக் கழகக் (எல்.ஐ.சி) கிளை அலுவலகம் முன் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

எல்.ஐ.சி, பாரத ஸ்டேட் வங்கி ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் அதானி குழுமத்தில் முதலீடு செய்ததைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி தலைமை வகித்தாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், காங்கிரஸ் நகரத் தலைவா் பாண்டி மெய்யப்பன், வட்டாரத் தலைவா்கள் செல்வம், கருப்பையா, காரைக்குடி நகா்மன்ற உறுப்பினா் ரெத்தினம், கண்டனூா் காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவா் குமாா், நெல்லியான், அப்பாவு, காங்கிரஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினா் சண்முகதாஸ், காரைக்குடி நகரச் செயலாளா் குமரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT