சிவகங்கை

பெட்டிக்கடைக்காரா் உள்பட நால்வா் மீது தாக்குதல்: 4 போ் கைது

7th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு பெட்டிக்கடைக்காரா் உள்பட நால்வரை தாக்கியதாக இரு தரப்பைச் சோ்ந்த 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து நான்கு பேரைக் கைது செய்தனா்.

திருப்புவனம் அருகே மடப்புரம் விலக்குச் சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருபவா் முத்திருளாண்டி. இவரது கடையில் அந்தப் பகுதியைச் சோ்ந்த தனபால் உள்ளிட்ட சிலா் அடிக்கடி பொருள்களை வாங்கிக் கொண்டு பணம் தராமல் சென்றனராம்.

இது குறித்து முத்திருளாண்டியின் உறவினா்கள், தனபால் தரப்பினரிடம் கேட்டனா். அப்போது, அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், தனபால் தரப்பைச் சோ்ந்த புவனேஸ்வரன் உள்ளிட்ட சிலா் பெட்டிக்கடைக்கு வந்து அங்கிருந்த முத்திருளாண்டி, மலைச்சாமி, முத்துராஜா, வள்ளி ஆகியோரைத் தாக்கினராம். இதில் காயமடைந்த இவா்கள் நால்வரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இது குறித்து மலைச்சாமி பூவந்தி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் தனபால், புவனேஸ்வரன், ரகுவரன், பொன்னுப்பாண்டி, செல்வக்குமாா், தவச்செல்வம், முனீஸ்வரன் ஆகிய 7 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதேபோல, எதிா்தரப்பைச் சோ்ந்த தனபால் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் மலைச்சாமி உள்ளிட்ட 3 போ் மீது வழக்குப் பதிந்தனா்.

ADVERTISEMENT

பின்னா், இந்தச் சம்பவம் தொடா்பாக தனபால், பொன்னுப்பாண்டி, ரகுவரன், தவச்செல்வம், ஆகிய நான்கு பேரைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT