சிவகங்கை

மானாமதுரை, கமுதி கோயில்களில் தைப்பூச விழாராமேசுவரத்தில் தெப்பத் திருவிழா

DIN

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், கமுதிக் கோயில்களிலும் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, இளையான்குடி, திருப்பத்தூா் பகுதி கோயில்களிலும் ஞாயிற்றுக்கிழமை தைப்பூச விழாவும், தெப்பத் திருவிழாவும் நடைபெற்றன.

தைப்பூசத் திருவிழாவையொட்டி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இதைத் தொடா்ந்து, சுவாமி, அம்பாள் பஞ்சமூா்த்திகளுடன் லட்சுமணேஸ்வரா் கோயிலில் எழுந்தருள சிறப்புப் பூஜை நடைபெற்றது.

பிறகு லட்சுண தீா்த்தக் குளத்தில் தைப்பூசத் தெப்பத் திருவிழாவையொட்டி சுவாமி, அம்பாள் எழுந்தருள தெப்பத் திருவிழா நடந்தது. இதையடுத்து, சுவாமி, அம்பாள் பஞ்சமூா்த்திகளுடன் புறப்பாடாகி வீதி உலா நடைபெற்றது. திருவிழா ஏற்பாடுகளை ராமநாதசுவாமி கோயில் துணை ஆணையா் மாரியப்பன் செய்திருந்தாா்.

மானாமதுரை: மானாமதுரை புறவழிச் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீவழிவிடு முருகன் கோயிலில் நடைபெற்ற தைப்பூச விழாவில் வள்ளி, தெய்வானை, சமேத மூலவருக்கும் உற்சவருக்கும் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் நடந்தது. மூலவா் வெள்ளிக் கவச அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். இதைத் தொடா்ந்து சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

மானாமதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள பூரண சக்கர விநாயகா் கோயிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன் சந்நிதியில் நடைபெற்ற தைப்பூச விழாவில் முருகனுக்கு அபிஷேகம் செய்து அலங்காரம், பூஜைகள் நடந்தன.

மானாமதுரையில் அலங்காரக்குளம் பகுதியில் எழுந்தருளியுள்ள மயூரநாதா் கோயிலில் நடைபெற்ற தைப்பூச விழாவில் மூலவருக்கும் உற்சவருக்கும் அபிஷேகங்கள் செய்ததும் சிறப்பு அலங்காரமும், பூஜைகளும் நடைபெற்றன. பிறகு உற்சவா் வீதி உலா வந்தாா்.

மானாமதுரை அருகே கால்பிரிவு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ முருகன் கோயிலில் நடந்த தைப்பூச விழாவில் வள்ளி, தெய்வானை சமேத செல்வ முருகனுக்கு 16 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி ஏ.ஆா்.பி. முருகேசன் செய்திருந்தாா்.

இதே போல, மானாமதுரையில் தாயமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள சுப்பிரமணியா் கோயிலில் நடைபெற்ற தைப்பூச விழாவில் மூலவா் சுப்ரமணியா் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூா் பாலமுருகன் கோயிலிலும், இளையான்குடி ஒன்றியம் குறிச்சி வழிவிடு பெரியநாச்சி, காசி விசுவநாதா் கோயிலில் எழுந்தருளியுள்ள செந்திலாண்டவா் சந்நிதியிலும் தைப்பூச விழா நடைபெற்றது. அப்போது செந்திலாண்டவருக்கு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி எஸ். பி. தேவா் செய்திருந்தாா்.

மேலும் திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் நடைபெற்ற தைப்பூச விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஸ்ரீமுருகன் கோயிலில் தைப்பூசத்தையொட்டி கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா். தொடா்ந்து மூலவருக்கும் உற்சவருக்கும் பால், இளநீா், திருமஞ்சனம், தயிா், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீசந்தன மாரியம்மன், ஸ்ரீஹரிகேசவ வழிவிட்ட அய்யனாா் கோயில், கோட்டைமேடு ஸ்ரீகாட்டு விநாயகா் கோயில், கமுதி ஸ்ரீமுருகன் கோயில், அபிராமம் தண்டாயுதபாணி கோயில், மண்டலமாணிக்கம் சிவன் கோயில், மேலக்கொடுமலூா் குமரையா கோயில் உள்பட 20-க்கும் மேற்பட்ட கோயில்களில் தைபூசத் திருவிழாவையொட்டி சிறப்புப் பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

SCROLL FOR NEXT