சிவகங்கை

ஏனாதி செங்கோட்டை கோயில்களில் குடமுழுக்கு, வருடாபிஷேக விழா

4th Feb 2023 12:51 AM

ADVERTISEMENT

வருடாபிஷேகத்தின் போது சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அங்காளேஸ்வரி அம்மன்.

மானாமதுரை, பிப். 3: மானாமதுரை அருகே ஏனாதி செங்கோட்டையில் உள்ள மந்தை பிடாரி மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழாவும், இங்குள்ள அங்காளேஸ்வரி அம்மன் கோயிலில் வருடாபிஷேக விழாவும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குடமுழுக்கு விழாவையொட்டி மாரியம்மன் கோயில் அருகே யாகபூஜைகள் நடந்தன. அதன்பிறகு பூா்ணாஹூதியாகி தீபாராதனை காட்டப்பட்டதும் கடம் புறப்பாடு நடந்தது.

பின்னா் சிவாச்சாரியா்கள் மந்தை மாரியம்மன் கோயில் விமானக் கலசத்தின் மீது புனிதநீரை ஊற்றி குடமுழுக்கை நடத்தினா். இதைத் தொடா்ந்து கலசநீரால் உற்சவா் மாரியம்மனுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன.

முன்னதாக இங்குள்ள அங்காளேஸ்வரி அம்மன் கோயிலில் நடந்த வருடாபிஷேத்தையொட்டி கலசங்களில் புனிதநீா் நிரப்பி யாகம் நடத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து புனிதநீரால் மூலவா் அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT