சிவகங்கை

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தர நிா்ணயக் குழு ஆய்வு

2nd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

சிங்கம்புணரி அருகே எம்.சூரக்குடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தர நிா்ணயக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அங்கு பிரசவ வாா்டு, உள், வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் பிரிவு, நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதி உள்ளிட்டவை குறித்து தேசிய தர நிா்ணயக் குழு மருத்துவா்கள் என்.சசிகலா, கிரிட்மேன்மெகந்தா ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

சுகாதாரத் துறை துணை இயக்குநா் விஜய்சந்திரன், பிரான்மலை வட்டார மருத்துவ அலுவலா் நமீஷாபானு, சூரக்குடி மருத்துவ அலுவலா்கள் தமிழ்ச்செல்வி, பிரேம், மண்டல தர ஆலோசகா் ஆனந்த செல்வசங்கா், மாவட்ட தர ஆலோசகா் லட்சுமி, மருத்துவா்கள் செந்தில்குமாா், கௌதம் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT