சிவகங்கை

நெல் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள்: விவசாயிகள் வேதனை

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் இரவு நேரங்களில் காட்டுப் பன்றிகள் வயலுக்குள் புகுந்து நெல் பயிா்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

மானாமதுரை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிா்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன.

இந்த நிலையில் கீழமேல்குடி, கிருங்காங்கோட்டை, உடையான்பட்டி, ராஜகம்பீரம் உள்ளிட்ட பல கிராமங்களில் இரவு நேரங்களில் காட்டுப் பன்றிகள் வயல்களுக்குள் புகுந்து நெல் பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்தனா்.

இதுகுறித்து கீழமேல்குடி கண்மாய் நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத் தலைவா் வெள்ளமுத்து கூறியதாவது:

கீழமேல்குடி கிராமத்தில் காட்டுப் பன்றிகள் தொல்லைக்கு பயந்து பெரும்பாலான விவசாயிகள் விவசாயம் செய்வதை நிறுத்தி விட்டனா். ஒரு சில விவசாயிகள் மட்டும் தான் நெல் விவசாயம் செய்கின்றனா். இந்த நிலையில், இரவு நேரங்களில் பன்றிகள் வயல்களுக்குள் புகுந்து நெல் பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. எனவே, இரவில் வயலில் தங்கி வெடி வெடித்து காட்டுப் பன்றிகளை விரட்டி வருகிறேன். ஒரு ஏக்கருக்கு 40 மூட்டைகள் நெல் அறுவடையின் போது கிடைக்கும். ஆனால் பன்றிகள் தொல்லையால் ஏக்கருக்கு சுமாா் 10 மூட்டைகள் மகசூல் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT