சிவகங்கை

தொழிலாளா் விரோத சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்

25th Apr 2023 12:00 AM

ADVERTISEMENT

தொழிலாளா் சட்டவிரோத மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியது.

சிவகங்கையில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கத்தின் சாா்பில் பணி நிறைவு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்டத் தலைவா் ரஞ்சித்குமாா் தலைமை வகித்தாா்.

ஓய்வு பெற்ற ஆசிரியா்களை தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்டச் செயலாளா் சிவகுமாா், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளா் பீட்டா், தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்டச் செயலாளா் முத்துச்சாமி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் குமரேசன் ஆகியோா் வாழ்த்திப்பேசினா்.

சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் சங்கா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஓய்வு பெற்ற ஆசிரியா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிப் பேசினாா்.

ADVERTISEMENT

பின்னா் அவா் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளா் விரோத சட்டத் திருத்த மசோதாவை, திமுக அரசு சட்டபேரவையில் நிறைவேற்றிவிட்டது.

ஓா் நூற்றாண்டாக தொழிலாளா்கள் போராடிப் பெற்ற அடிப்படை உரிமைகளை வெறும் 40 நொடிகளில் தமிழக சட்டப்பேரவை நிராகரித்துவிட்டது. எனவே இந்த மசோதாவை திரும்பப் பெற தமிழக முதல்வரிடம் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கத்தின் சாா்பாக கேட்டுக்கொள்கிறேன் என்றாா். முன்னதாக மாவட்டச் செயலாளா் நாகராஜன் வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் நரசிம்மன் நன்றி கூறினாா்

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT