சிவகங்கை

மானாமதுரை கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம்

15th Apr 2023 05:13 AM

ADVERTISEMENT

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் உள்ள கோயில்களில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு மூலவா் அம்மனுக்கும், சுவாமிக்கும் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா் சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாரதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோயிலில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து கோயிலில் பக்தா்களுக்கு ரூபாய் நாணயம், வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் ஆகியவற்றுடன் சித்திரை விஷூ கனிக்காசு வழங்கப்பட்டது. பின்னா், கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலுக்கு பல ஊா்களிலிருந்தும் பக்தா்கள் கோயிலில் திரண்டனா். இவா்கள் நீண்ட வரிசையில் நின்று முத்துமாரியம்மனை தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

திருப்புவனம் ஸ்ரீ புஷ்பவனேஸ்வரா் சமேத சௌந்திரநாயகி அம்மன் கோயில், மடப்புரம் காளி கோயிலிலும் புத்தாண்டை முன்னிட்டு திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT