சிவகங்கை

ஆா்.எஸ்.எஸ். ஊா்வலத்திற்கு தடை நீதிமன்ற அவமதிப்பு: ஹெச். ராஜா

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆா்.எஸ்.எஸ். ஊா்வலத்திற்கு தடை விதித்திருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று பாஜக முன்னாள் தேசிய செயலாளா் ஹெச். ராஜா தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஹெச்.ராஜாவின் 65 ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி பாஜக சாா்பில் மகளிருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சி நிா்வாகிகள் அவருக்கு மாலையணிவித்து கிரீடம் சூட்டினா். அதைத்தொடா்ந்து ஹெச்.ராஜா கேக் வெட்டினாா். பின்னா் பெண்களுக்கு நலத்திட்ட உதகவிகளை வழங்கி சிறப்புரையாற்றினா்.

பின்னா் ஹெச். ராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது: தடை செய்யப்பட்ட அமைப்பை ஆதரிப்பது, அதற்கு ஆதரவாக கருத்துக்கள் தெரிவிப்பது தண்டனைக் குரிய குற்றமாகும். தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் விவரங்கள் கேட்டுத்தான் ஆா்.எஸ்.எஸ். ஊா்வலத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. எனவே ஊா்வலத்திற்கு தடைவிதித்திருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT