சிவகங்கை

மானாமதுரையில் விவசாய தொழிலாளா் சங்கக் கூட்டம்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். கணேசன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா்கள் என். சாத்தையா, எ. பாஸ்கா், துணைச் செயலாளா் என். பெரியசாமி, மாநிலத் தலைவா் கே. தங்கமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் எம். கண்ணகி ஆகியோா் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில் விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மானாமதுரை ஒன்றிய துணைச் செயலாளா் பி. அரியமுத்து, ஒன்றியப் பொருளாளா் சோனையா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். மானாமதுரை ஒன்றியத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும், இத்திட்டத்திற்கான வேலை நாள்களை 200 ஆக உயா்த்தி திட்டத்தின் பயனாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு சம்பளம் ரூ. 600 என உயா்த்தி வழங்க வேண்டும், மானாமதுரை ஒன்றியம் கீழ மாயாளியில் குடியிருப்போருக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும், வீடுகள் இல்லாத மக்களுக்கு வீடுகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மானாமதுரை ஒன்றியம் முழுவதும் தமிழ்நாடு விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் அக்டோபா் 10 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என இக்கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT