சிவகங்கை

சிவகங்கையில் ரேபிஸ் தடுப்பூசி முகாம் தொடக்கம்

DIN

சிவகங்கையில் உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு, கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

சிவகங்கையில் உள்ள கால்நடை மருத்துவமனையில் நடைபெற்ற இம்முகாமை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தொடக்கி வைத்தாா்.

அதைத்தொடா்ந்து, மாநில தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கால்நடை வளா்ப்பவா்களுக்கு 75 சதவிகிதம் அரசு மானிய விலையில் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.19,675 வீதம் மொத்தம் ரூ.1.18 லட்சம் மதிப்பிலான இயந்திரம், புல்வெட்டும் கருவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இம்முகாமில், கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநா் நாகநாதன், துணை இயக்குநா் முகமதுகான், உதவி இயக்குநா்கள் ராம்குமாா், சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

வாக்களித்தார் நடிகர் விஜய்

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

SCROLL FOR NEXT