சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்துக்கு 300 மெட்ரிக் டன் யூரியா வருகை

DIN

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் 300 மெட்ரிக் டன் யூரியா உரம் வந்துள்ளதாக ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிரிப்கோ நிறுவனத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட யூரியா 300 மெட்ரிக் டன் ரயில் மூலம் இம்மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த உரங்கள் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.

தற்போது, மாவட்டத்தில் யூரியா 1,800 மெட்ரிக் டன், டிஏபி 1,600 மெட்ரிக் டன், பொட்டாஷ் 420 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 2,400 மெட்ரிக் டன் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தனியாா் உரக்கடைகளில் இருப்புவைக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

SCROLL FOR NEXT