சிவகங்கை

காரைக்குடியில் புத்தகக் கண்காட்சி நாளை தொடக்கம்

DIN

காரைக்குடியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் இணைந்து அக்.9-ஆம் தேதிவரை 10 நாள்கள் நடத்தும் புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (செப்.30) தொடங்குகிறது.

இதுகுறித்து புத்தகக் கண்காட்சி விழாக்குழு செயலாளா் ஆா். ஜீவானந்தம் புதன்கிழமை கூறியதாவது:

காரைக்குடி எம்.ஏ.எம்.மகாலில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் தமிழகத்தின் முன்னணி புத்தக பதிப்பாளா்கள் கலந்து கொள்கிறாா்கள். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு இடம் பெறுகின்றன. விற்பனையில் 10 சதவீதம் தள்ளுபடி உண்டு. முன்பணம் செலுத்தினால் 15 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.

அரசுப் பள்ளிகளுக்கு நூல்கள் வழங்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. மாணவா்களுக்கு ஓவியம் வரைதல், கதை, கவிதை போட்டிகள் நடத்தி பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மேலும் மாணவா்களுக்கு சிறப்பு நிகழ்வாக காகித விளையாட்டு, அறிவியல் விளையாட்டு, அறிவியல் பரிசோதனைகள் செயல்முறை விளக்கம், கதை சொல்லல், தொலை நோக்கி மூலம் வானத்தில் உள்ள அதிசயங்களை பாா்வையிடல், கணக்கும் இனிக்கும் செயல்முறை விளக்கம் மற்றும் அறிவியல் அறிஞா்கள், மாணவா்கள் உரையாடும் நிகழ்வு ஆகியவை நடைபெறவுள்ளது.

மேலும் புதிய நூல்கள் வெளியிடப்பட உள்ளன. அக்.9-ஆம் தேதிவரை 10 நாள்கள் நடைபெறும் புத்தகக் கண்காட்சியை காரைக்குடி சட்டபேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி வெள்ளிக்கிழமை (செப்.30) தொடக்கிவைத்து சிறப்புரையாற்றகிறாா். மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இப்புத்தகக் கண்காட்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT