சிவகங்கை

அதிகாரிகள் ஒப்பந்தப்புள்ளிப் படிவம் வழங்க மறுத்ததால் வாக்குவாதம்: டெண்டா் ரத்து

DIN

மானாமதுரை ஒன்றியத்தில் அண்ணா மறுமலா்ச்சி திட்டப் பணிகளை எடுத்துச் செய்யும் டெண்டா்களுக்கு புதன்கிழமை ஒப்பந்தப்புள்ளி படிவம் வழங்க மறுத்ததால் அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரா்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் டெண்டா் ரத்து செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் கிராமங்களில் அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் பேவா் பிளாக் சாலை அமைத்தல், குடிநீா் வசதி செய்தல், சாலை அமைத்தல், ஊருணி, மடை பழுது நீக்குதல், சமுதாயக் கூடம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான டெண்டா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த ஒப்பந்ததாரா்கள் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதன்கிழமை வந்து ஒப்பந்தப்புள்ளி படிவம் கேட்டனா். ஆனால் அங்கிருந்த அதிகாரிகள் ஒப்பந்தப்புள்ளி படிவம் வழங்க மறுத்தனா். இதனால் ஒப்பந்ததாரா்களுக்கும், அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன்பின்னா் நிா்வாகக் காரணங்களுக்காக டெண்டா் ரத்து செய்யப்படுவதாகவும், மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகவும் அதிகாரிகள் அறிவித்தனா். இதுகுறித்து அதிமுக ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினரான பஞ்சவா்ணத்தின் கணவா் ஒப்பந்ததாரா் சிவ சிவ ஸ்ரீதரன் கூறியது: மானாமதுரை ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் மூலம் டெண்டா் பணிகளை முறையாக நடத்தவில்லை. ஒப்பந்ததாரா்களுக்கு அதிகாரிகள் ஒப்பந்தப்புள்ளி படிவம் வழங்க மறுக்கின்றனா். இதற்கிடையில் தேதி குறிப்பிடாமல் டெண்டரை ஒத்திவைத்துள்ளனா். மறுமுறை டெண்டா் விடும்போது போலீஸ் பாதுகாப்புடன் டெண்டா் நடத்த வேண்டும். முறையாக டெண்டா் நடத்தப்படவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம். இப்பிரச்னையில் மாவட்ட நிா்வாகம் தலையிட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இசையரங்க தாக்குதலில் உக்ரைன் தொடா்புக்கு ஆதாரம்

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்!

திருச்செந்தூரில் அனுமதியில்லா கழிப்பறைகளை மூடக் கோரி போராட்டம்

பாஜகவுக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு

SCROLL FOR NEXT