சிவகங்கை

செங்குடி தேவாலயத்தில் சப்பர பவனி

29th Sep 2022 10:34 PM

ADVERTISEMENT

செங்குடி கிராமத்தில் புனித மைக்கேல் அதிதூதா் ஆலய சப்பர பவனி வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

ஆா். எஸ். மங்கலம் அருகேயுள்ள இந்த தேவாலயத்தில் கடந்த செப்டம்பா் 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அன்று முதல் தினமும் நவநாள் திருப்பலியும் சிறப்புத் திருப்பலியும் நற்கருணை ஆராதனையும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்பர பவனி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் சிவகங்கை மறை மாவட்ட சூசைமாணிக்கம் திருவிழா திருப்பலி நிறைவேற்றினாா். அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மேய்க்கல் அதிதூதா் அருளானந்தா், இருதய ஆண்டவா் செபஸ்தியாா் சொரூபங்கள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். பங்குத் தந்தை வின்சென்ட் அமல்ராஜ் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து கொடி இறக்க விழா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை செங்குடி கிராமத்தினா் செய்திருந்தனா். விழாவில் பங்குத் தந்தையா்கள் மற்றும் அருட் சகோதரிகள், சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த பங்கு மக்கள் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT