சிவகங்கை

பிஎப்ஐ அமைப்புக்கு ஆதரவாக போராடிய 40 பெண்கள் மீது வழக்கு

29th Sep 2022 10:35 PM

ADVERTISEMENT

பிஎப்ஐ அமைப்புக்கு தடை விதித்ததைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட 40 பெண்கள் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

திருப்புல்லாணி ஒன்றியம் பெரியபட்டணம் பகுதியில் 40 பெண்கள் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை வெளியே விடாமல் தடுத்து மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அங்கு வந்த காவல் துறையினா் தடை செய்யப்பட்ட அமைப்புக்காகப் போராட்டம் நடத்தினால் கைது செய்யும் நிலை ஏற்படும் என எச்சரித்தனா். இதனைத் தொடா்ந்து போராட்டத்தை பெண்கள் கைவிட்டனா். இந்நிலையில், தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தியதாக 40 பெண்கள் மீது திருப்புல்லாணி போலீஸாா் புதன்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT