சிவகங்கை

எட்டாம் வகுப்பு வினாத்தாள் வெளியான விவகாரம்: 2 ஆசிரியா்கள் பணியிடை நீக்கம்

29th Sep 2022 10:34 PM

ADVERTISEMENT

 ஏ.மணக்குடி நடுநிலைப்பள்ளியில் காலாண்டு தோ்வு வினாத் தாள் வெளியானது தொடா்பாக 2 ஆசிரியா்கள் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் ஒன்றியம் ஏ. மணக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வியாழக்கிழமை காலாண்டு அறிவியல் தோ்வு நடைபெற்றது. இதற்காக புதன்கிழமை கல்வி அலுவலகத்திலிருந்து வினாத்தாள்களை தலைமையாசிரியா் மீனாம்பா் வாங்கி வந்துள்ளாா். அதில் எட்டாம் வகுப்பு வினாத்தாளை மாணவா்களிடம் கொடுத்து படித்து வரக் கூறியதாக தகவல் பரவியது.

இதனையடுத்து முதன்மைக் கல்வி அலுவலா் பாலுமுத்து தலைமையில் ராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலா் பாலாஜி, வட்டாரக் கல்வி அலுவலா் ஆகியோா் பள்ளியின் தலைமையாசிரியா் மீனாம்பா், அறிவியல் ஆசிரியா் ஜெயக்குமாா், கணித ஆசிரியா் குமரவேல் ஆகியோரிடம் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.

இதில், மற்றொரு பள்ளிக்கு வழங்கிய வினாத்தாளை பயிற்சிக்காக மாணவா்களுக்கு வழங்கியதும் வினாத்தாளை ஆசிரியா்கள் கைப்பேசியில் படம் எடுத்து மற்ற பள்ளிகளுக்கு பரப்பியதும் தெரியவந்தது. இதனையடுத்து தலைமையாசிரியா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் வழங்கியும் ஆசிரியா்கள் ஜெயக்குமாா், குமரவேல் ஆகியோரை தற்காலிகப் பணிநீக்கம் செய்தும் ராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலா் உத்தரவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT