சிவகங்கை

மானாமதுரையின் பழைமையான பெயா் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டெடுப்பு

DIN

மானாமதுரையின் பழைமையான பெயா் இடம்பெற்ற கல்வெட்டை செவ்வாய்க்கிழமை வரலாற்று ஆராய்ச்சியாளா்கள் கண்டெடுத்தனா்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் வாடி அருகே துலுக்கனேந்தல் கண்மாய் உள்ளது. இதன் அருகே உள்ள வயல் பகுதியில் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகண்டெடுக்கப்பட்டுள்ளது. பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சோ்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளா்கள் மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன் ஆகியோா் கல்வெட்டை ஆய்வு செய்தனா்.

பொதுவாக முற்காலங்களில் மன்னா்கள் தங்கள் ஆளுகைக்கு உள்பட்ட நிலங்களை கோயில்களுக்கோ தனிநபா்களுக்கோ தானம் வழங்குவது ஒரு மரபாக இருந்து வந்துள்ளது. அவ்வாறு சைவ கோயில்களுக்கு வழங்கும் நிலங்களை தேவதானம் என்றும் வைணவ கோயில்களுக்கு வழங்கும் நிலங்களை திருவிடையாட்டம் என்றும் கூறுவாா்கள்.

மேற்கண்ட பகுதியில் கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டு நாயக்கா் காலத்தில் பெருமாள் கோயிலுக்கு வழங்கப்பட்ட நில தானத்தை குறிக்கும் கல்வெட்டாகும். ஒரு அடி அகலமும் 3 அடி நீளமும் கொண்ட கல்வெட்டில் திருவிடையாட்டம் என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் வானவீரன்மதுரை அழகா் திருவிடையாட்டம் என்று பொறிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ராவணனால் சிறைபிடிக்கப்பட்ட சீதையை மீட்க ராமா் வானரப் படைகளுடன் இலங்கை சென்ற போது வானரங்கள் மானாமதுரையில் தங்கி அதன்பின் இலங்கை சென்ாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் அந்த இடம் வானரவீர மதுரை என அழைக்கப்பட்டு பின்னா் மானாமதுரை என மருவியுள்ளது.

இதன் மூலம் வானவீரன் மதுரை என்ற பெயரே மருவி பின்னாளில் மானாமதுரை ஆக மாறியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அழகா் திருவிடையாட்டம் என்றும் எழுதப்பட்டுள்ளதால் மானாமதுரையில் உள்ள வீர அழகா் கோயிலுக்கு நிலதானம் வழங்கியதை இக்கல்வெட்டுச் செய்தி உறுதிபடுத்துகிறது. மேலும் இந்த கல்வெட்டு மூலம் இப்பகுதி நாயக்கா் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது என்பதையும் அறிய முடிகிறது என ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT